மிட்டாய் கவிதைகள்!

மழையிலே அவள்!

July 23, 2013

mazhaiyile aval

பொழியும் மழையின்
ஒவ்வொரு துளியிலும்
உந்தன் முகத்தின்
புன்னகை மின்னுதே!

அணைக்க நினைத்து
கரங்களை நீட்டினால்,
நீர்தான் மிஞ்சுதே
நீயெந்தன் நெஞ்சிலே!


எழுத்தாளர்: எம்.ஆர்.கார்த்திக்